செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தமிழகத்தில் இன்றும் தீண்டாமை கொடுமைகள்!

தமிழகத்தில் உள்ள 12  மாவட்டங்களில்  உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமை கொடுமை குறித்து "evidence " அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது . ( மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகை,சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ) -இல் 213 கிராமங்களில் நடத்திய ஆய்வு முடிவுகள். 


ரேஷன்கடை:-


* 213 கிராமங்களில் 70 கிராமங்களில் ரேஷன் கடையில் சாதியப்பாகுபாடு உள்ளது.
* 23 கிராமங்களில் தலித் மக்கள் ஆதிக்க சாதியினருடன் சேர்ந்து  ரேஷன் கடையில் நிற்க முடியாது.
* 31 கிராமங்களில் வரிசையில் நின்றாலும் தொடக்கூடாது.
* 2 % ரேஷன் கடைகள் மட்டும் தலித் குடியிருப்புகளில் உள்ளது.

(நிகழ்வு)

24 . 09 . 2009 கள்ளகுறிச்சி அருகில் தச்சூர் கிராமத்தை சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ஆதிக்க சாதி பெண்ணை தொட்டதால் மானபங்க படுத்தப்பட்டார்.

சுடுகாடு :

* தலித் மக்களின் பிணங்கள்  பொது பாதையில் செல்லக் கூடாது.
*ஆதிக்க சாதியினரின் குடியிருப்புக்கு வழியே செல்லக்கூடாது.
* தலித் மக்களுக்கு தலித் அல்லாத மக்களுக்கு தனி சுடுகாடு.

(நிகழ்வு)


02 .01 .2011  தேனீ அருகில் உள்ள கூழயநூரில் ராஜி என்கிற பெரியவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து 27 .01 .2011 . அன்று சின்னாயி என்கிற தலித் மூதாடி பெட்ரோல் வெடி குண்டு வீசி கொல்லப்பட்டார் .

சலூன் கடை:


* 67 % சலூன் கடைகளில் சாதிய பாகுபாடு உள்ளது.
* 142  கிராமங்களில் தலித் மக்களுக்கு முடி வெட்ட தடை உள்ளது.
* 13  கிராமங்களில் கத்திரிகோல், சீப்பு, கத்தி போன்றவை தலித்துகளுக்கு தனியாகவும் மற்ற சாதியினருக்கு தனியாகவும் பயன் படுத்தப்படுகிறது.
* 25 கிராமங்களில் சலூன் கடை நாற்காலிகளில் தலித்கள் அமரக்கூடாது.


(நிகழ்வு)

12 .01 .2008 அன்று உத்தமபாளையம் மர்கயன் கோட்டை கிராமத்தில் தன் குழந்தைகளுக்கு முடி வெட்ட சலூன் உரிமையாளர் மறுத்தார். இதற்கு பெரியசாமி என்னும் தலித் எதிர்ப்பு தெரிவித்தால் ஆதிக்க சாதி இந்துக்களால் தாக்கப்பட்டார்.

கிணறு:-

* 68 % கிராமங்களில் பொது குழாயில் நீர் எடுக்கவும் பொது கிணற்றில் நீர் எடுக்கவும் உரிமை இல்லை.
* 131 கிராமங்களில் தலித்களுக்கு என்று தனிதனி நீர்நிலைகள் உள்ளது.


(நிகழ்வு)


விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்கிற தலித் இளைஞர் பொது கிணறில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்க சாதி கும்பலால் தாக்கப்பட்டார்.


மருத்துவமனை:-


* சில கிராமங்களில் மருத்துவமனைகளிலும் சாதிய வேறுபாடு  காணப்படுகிறது.

(நிகழ்வு)

மதுரை கீரிபட்டியை சேர்ந்த தலித் பெண் "வசந்த மாளிகை" என்கிற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட போது, அங்கு இருந்த ஊழியர் கொண்டை ஊசியால் குத்தி சேதப்படுத்தி  இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரக குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருகிறது.

பள்ளிகள்:- 

*29 கிராமங்களில் பள்ளிகளில் சாதியப்பாகுபாடு உள்ளது.
கோவையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர் தலித் மாணவர்களை மைனஸ்(-) என்றும் மற்ற மாணவர்களை பிளஸ் (+) என்று தான் அழைப்பாராம்.
* தேனீ அருகே உள்ள எண்டப்புளி கிராமத்தில் தலித் மாணவர்கள் பின் வரிசை இருக்கையில் தான் அமர வேண்டுமாம்.
* பள்ளிகளில் தலித் மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தும் நிலை உள்ளது.

பேருந்து நிறுத்தம்:-

*  பேருந்து நிறுத்தங்களில் தலித் மக்கள் அமர கூடாது என்று எழுதப்படாத தடை உள்ளது.
* ஆதிக்க சாதி சிறுவர்களை தலித் முதியவர்கள் மரியாதையோடு அழைப்பதும், தலித் முதியவர்களை ஆதிக்க சாதி சிறுவர்கள் மரியாதையை இல்லாமல் அழைக்கபடுவதும் நடைமுறையில் உள்ளது.

அஞ்சலகம்:-

* அஞ்சலகங்களில் தலித்துகள் நுழையக்கூடாது.
* தபால்காரர் தலித் குடியிருபுகளுக்குள் வரமாட்டார்.
               


                        இவை வெறுமனே 213 கிராமங்களில் மட்டுமே எடுத்த ஆய்வு முடிவுகள். இன்னும் ஆய்வுக்கு உட்படாத கிராமங்களும் மாவட்டங்களும் தமிழகத்தில் உள்ளது.
                        தமிழக அரசு கணக்கின் படி 2009 இல் -384 - கிராமங்களில் மட்டுமே தீண்டாமை நிலவியது. 2010 -இல் -174 - கிராமங்களில் நிலவியது.  2010 -இல் தீண்டாமை வன்கொடுமை  தொடர்பாக வெறுமன தமிழகம் முழுவதும் 1000 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

                                         -------"எவிடென்ஸ்"-------- கதிர்
                                    (கட்டுரை ஆனந்த விகடனிலிருந்து )

                             சாதிகள் இல்லையடி பாப்பா குலத் 
                            தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்          
                           மேலவர் கீவழரென்றே வெறும்
                          வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
                          போலிச் சுவடியை எல்லாம் இன்று
                          பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

என்று பாரதி பாடி சென்றார். ஆனால் இன்றோ சாதிகள் இல்லை என்று சொல்லி 10 கட்சிகள், தாழ்த்தப்பட்டவர்கள்  பெயரை சொல்லி 10 கட்சிகள் உள்ளது. இத்தனை கட்சிகள் இருந்து என்ன பயன் இவர்களின் பெயர்களை சொல்லி அவர்களின் குடும்பங்கள் மட்டுமே முன்னேறி உள்ளது. தாழ்த்தபட்டவர்களின் நிலைமை படு பாதாளத்திலே உள்ளது.இதற்கு இடையில் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருகிறது என்று சொல்கிறார்கள்.

தாழ்த்தபட்டவர்களுக்கு பல சலுகைகளை அறுவிக்கும் அரசு இது போன்ற தீண்டாமைகொடுமைகளை விரைவில் களையும்  என்று எதிர்பார்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக