புதன், 10 ஆகஸ்ட், 2011

கேவலமான சிரார்த்த (கருமாதி) மந்திரம்

மந்திரம்:-  

                     யம்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா,
தன்மே ரேதஹ் பிதா விருங்க்தா ஆபுரண் யோப  பத்யதாம்  ரங்கராஜ  சர்மனே ஸ்வாஹா, ரங்கராஜ சர்மனே அஸ்மது பித்ரே  இதம் நமம. கிருஷ்ண, கிருஷண, கிருஷ்ண.

பொருள்:-

எனது தாய் பதிவிரதா (பத்தினி) தர்மங்களை முழுவதுமாக கடைபிடிக்காமல்,
அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னியில் நானிடும் பூசை பொருளுக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த பொருளைப் பெறாமல் தடுத்து, நான் எந்த தகப்பனாருக்கு சிராத்தத்தைச் (கருமாதி) செய்கிறேனோ அவர் - அதாவது எனது தாயின் கணவர் இந்த பூசை பொருளை பெறவேண்டும்.

விளக்கம்:- 

தகப்பனார் இறந்ததற்கு அவருடைய மகன் கருமாதியின் போது, சொல்லும் மந்திரம் இது தாயின் நடத்தையை தவறாக சொல்கிறது.  தன் தகப்பனாருக்கு கருமாதி கொடுப்பவர் எவராக இருந்தாலும், அவர் தன் தாயை தவறானவள் என்கிற கட்டுமானத்தின் மீது தான் இந்த மத்திரத்தை சொல்கிறார். அல்லது சொல்விக்கிறார்.

                      ------------------ஆதாரம்------------------

                                சுவாமி சிவானந்த சரசுவதியின் "ஞான சூரியன்"

                               நான் கண்டது,-------- "சுயமரியாதைத் திருமணம்- ஏன்"

                                                                                                -----பெரியார்.-------

3 கருத்துகள்:

  1. இந்த வாசகத்தை தான் அவங்க பயன் படுத்துறாங்கனு சொல்றதுக்கு ஆதராம் என்ன?
    இந்த வாசகத்தோட பொருள் உங்களுக்கு எப்படி புரிந்தது?
    தாம் சமஸ்கிருத வித்வானா?
    இல்லையென்றால் யார் மொழி பெயர்த்தார்கள?

    இது போல் ஆயிரம் கதையை யார் வேண்டுமானலும் கட்டலாம் அனைத்துக்கும் ஆதாரம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொல்றதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையே கடைசியா கிருஷ்ணானு வருதே அதற்கு அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  3. கிருஸ்துவன் மொழி பெயர்த்த கதை

    பதிலளிநீக்கு