புதன், 17 ஆகஸ்ட், 2011

பெரியாரும் கபடநாடகக் கலைஞர் கருணாநிதியும் (முரண்)

சில அறிவீளிகள் தந்தை பெரியாரையும் கபடநாடகக் கலைஞரையும் ஒப்பிட்டு பேசுகின்றனர். பெரியாரின் நிழலாக கலைஞர் வாழ்வதாக  பொய்யாக புகழ்கின்றனர். பெரியார் கலைஞர் ஒப்பீடு என்பது ஒவ்வாத நிகழ்வாக உள்ளதால் இக்கட்டுரை எழுகிறது. 

* கடவுள், மதம், மூடநம்பிக்கை, சோதிடம் , ஆகியவற்றை எதிர்த்தவர் பெரியார்.
                 சோதிட நம்பிக்கையால், மஞ்சள் துண்டு மற்றும் ராசிக்கல் மோதிரம் அணிந்திருப்பவர் கலைஞர்.

* கோயில் செல்ல மறுத்தவர் பெரியார்.
                 இராசராச சோழனின் ஆயிரமாண்டு விழாவில் சோதிடனின் அறிவுரையின் பெயரில், தஞ்சை கோயிலை சுற்றி வந்தவர் கலைஞர். தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கோவிலுக்கு அனுப்பிவைக்கும் கபட நாத்திகர் கலைஞர்.

* பார்ப்பனர்களை  நம்ப மறுத்தவர் பெரியார்.
                 பார்ப்பனர்களை தனது உதவியாளர்களாகவும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவியாளர்களாகவும், தணிக்கை அதிகாரியாகவும் நியமித்தவர் கலைஞர்.

* கள்ளுக்கடை மறியலுக்காக தனது தென்னந் தோப்பினையே வெட்டி வீழ்த்தியவர்  பெரியார்.
                  இராசாசியின் மது விலக்கு சட்டத்தை கைவிட்டு  மதுக்கடைகளை திறந்தவர் கலைஞர்.

* இராசாசியை  அரசியல் நடை முறையில்   எதிர்த்தவர் பெரியார்.
                 ஆட்சியைப் பிடிக்க இராசாசியுடன்  கூட்டணி வைத்தவர் கலைஞர்.

* மனைவியின் மரணத்திற்குப் பின்பே  மறுமணம் செய்தவர் பெரியார்.
                 சோதிடனின் அறிவுரையால் மனைவிகள் இருக்கும் போதே மும்மணம் செய்தவர் கலைஞர்.

* வாரிசு பெறுவதையே குற்றமாக கருதியவர் பெரியார்.
                  வாரிசு அரசியலை உருவாக்கி தமிழகத்தையே கூறு போட்டு, அவர்களை  குறுநில மன்னர்களாக ஆழச் செய்தவர் கலைஞர்.

*பதவிகள் என்பதை துச்சமென எண்ணியவர் பெரியார்.
                  பதவி என்பது காலம்காலமாக தனது குடும்ப சொத்தாக இருக்க வேண்டி தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவியை பகிந்தளிதார்.

* திரைத்துறை என்பது வீண் பொழுதுப் போக்கு  என்றவர் பெரியார்.
                   திரைத் துறையிலும் தனது தொழிலைச் செய்து, திரைத் துறையினரால்  வேண்டா வெறுப்பாக  பாராட்டப் பெறுபவர்கள்  கலைஞரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஆவர்.

* தனது சொந்த சொத்துகள் அனைத்தையும் அறக்கட்டளையின் பெயரால் தானம் செய்தவர் பெரியார்.
                   ஊரில்  பெரும்பான்மையான நிலங்களையும், தொழில்களையும் தனக்கும் தனது குடும்பத்தினர்க்கும் பகிர்ந்து அளித்துவிட்டு, தான் குடியிருந்த ஒற்றை  வீட்டை தானம் என்கிற பெயரில் தருவதாக கபட நாடகம் ஆடுபவர் கலைஞர்.

                         " தந்தைப்  பெரியாருக்கு  நிகராக  பொருத்திப்பார்க்க 
                           கபடநாடகக் கருணாநிதிக்கு  எந்த  தகுதியும்
                           இல்லை  என்பதே  உண்மை  உணர்ந்தவர்கள் வாக்கு"
                                                                
                                                           ---இராவணப் பாண்டியன்.

1 கருத்து: