உலக நாயகானக எல்லோராலும் அறியப்படும் கமல், பகுத்தறிவுவாதியாக வேடமிடும் பார்ப்பன நாயகன். அவரின் பகுத்தறிவு வாதத்தில் உள்ள உண்மைகளை அறிய முயன்றால் கிடைப்பதோ வைணவப் பார்ப்பானியம். வெறுமனே பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை சாதிய குறியிட்டு அழைக்க வேண்டி இக்கட்டுரை எழவில்லை. அவரது பகுத்தறிவு சைவத்தை குறை கூறுவதாக மட்டுமேயன்றி வைணவத்திற்கு ஆதரவு சேர்ப்பதாகவும் உள்ளதால், திரு. கமல் அவர்களின் திரைப்படம், பாத்திரம், பாடல், குடும்பம், நட்பு, ஆகியவற்றில் உள்ள பார்ப்பானியத்தை வெளிப்படுத்தவே இக்கட்டுரை. * "மகாநதி" படத்தில் "ஸ்ரீ ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி"
எனும் பாடலில் தொடங்கி "மன்மதன் அம்பு" வரை வைணவப் பார்ப்பானராக நூல் பிடிப்பவர் தான் கமல்.
* "ஹேராம்" படத்தில் மகாத்மா காந்தியையே கொல்ல முற்படும் பார்ப்பானிய வேடத்தில் (RSS) நடித்தவர் தான் கமல்.
* "அன்பே சிவம்" படத்தில் ஒருகாட்சியில், தனது பார்ப்பான வாரிசான மாதவனிடம் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லவேண்டி, வள்ளுவனை "மைலாப்பூர் மேன்; ஒயிட் பியர்டு மேன்;நியர் சேன்ஸ்கிரிட் காலேஜ்" என்பார்.உலகப் பொதுமறை தந்த வள்ளுவனை, பார்ப்பனரின் சமஸ்கிருத மொழிக் கல்லூரியின் துணை கொண்டு விளக்கியவர் தான் இந்த கமல்.
* "அன்பே சிவம்" படத்தில் சிவனை வணங்கும் நாசரை வில்லனாகவும், அப்படத்தில் வரும் நாய்க்கு, சங்கரன் (சிவன்) எனப் பெயர் வைத்து சைவத்தை மட்டும் எதிர்த்த வைணவப் பகுத்தறிவாதி தான் கமல்.
* "வசூல்ராஜா" படத்தில் ஒரு காட்சியில், சுவாமிநாதன் எனும் சைவப்பெயரை அழைக்க மறுத்து, மீண்டும் மீண்டும் கோபிநாத் என்ற வைணவப் பெயராலேயே அழைப்பார். மற்றொரு காட்சியில் "அன்பேசிவம்" என்று ஒருவர் சொன்னதை மறுத்து "அன்பே வெங்கடாசலம்" என்று வெளிப்படையாகவே வைணவ ஆதரவு வசனம் பேசியவர் தான் கமல்.
* "தசாவதாரம்" படத்தில் ரங்கராஜநம்பியாக தோன்றி இராஜராஜ சோழன் வைணவத்தை வெறுத்தாகக் காட்டி, தனது வைணவக் கொடியை நாட்டியவர் தான் கமல். இராஜராஜ சோழனையே பிழை உள்ளவனாய்க் காட்டி
தமிழர்களின் இன உணர்வைக் கொச்சைப் படுத்தியவர் தான் கமல்.
* "தசாவதாரம்" படத்தில் "கல்லை மட்டும் கண்டால்" பாடலில் "இராஜலட்சுமி நாயகன் ஸ்ரீநிவாசன் தான் ஸ்ரீநிவாசன் சேய் இந்த விஷ்ணு தாசன் தான்" என தன கருத்தைப் பதித்தவர் தான் கமல். (இவ்வடியில் வரும் இராஜலட்சுமி கமலின் தாயார்; ஸ்ரீநிவாசன் கமலின் தந்தையார் என்பதை நினைவில் கொள்க)
* "தசாவதாரம்" படத்தில் "சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம், அவனது கர்வம் தவிர்க்கச் சொல்" என்றும், "இன்னபிற தோஷங்களுடன் பிரம்மஹத்தி தோஷமும் பிடிக்கும் என்று சொல்" என்று பார்ப்பனரின் ஆயுதத்தை தனது தந்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் தான் கமல். (பிரம்மஹத்தி தோஷம் என்பது பார்ப்பனரை பழித்தால்; அவர்கள் சொல் படி நடக்க மறுத்தால் வரும் தோஷம் என்பதை நினைவில் கொள்க)
* "மன்மதன் அம்பு" படத்தில் ஈழத்து இளைஞர், நடிகை திரிஷாவிடம், "நான் உங்கள் செருப்பாகவும் நடிக்கத்தயார்" என்று கெஞ்சுவதாகக் காட்டி, தமிழினத்தையே கொச்சைப் படுத்திய பச்சை பார்ப்பனன் தான் கமல்.
* தனது பெயரை கமல்ஹாசன் என்று இருந்ததை கமலஹாசன் என்று எண்சோதிட முறைப்படி மாற்றி எண்சோதிடத்தை ஏற்றுகொண்ட பகுத்தறிவுவாதி தான் கமல்.
* தனது மகளுக்கு "ஸ்ருதி" என சமஸ்கிருதப் பெயரிட்டு, தனது பார்ப்பானியத்தை வெளிப்படுத்தியவர் தான் கமல்.(வேதத்தை அருகில் அமர்ந்திருந்து கேட்பவர் அதாவது பார்ப்பனர் என்பதே ஸ்ருதி என்பதன் மறைபொருள்)
* மகள் ஸ்ருதியை பள்ளியில் சேர்க்கும்போது, சாதி எனும் கட்டத்தை நிரப்பாமல் சாதியை ஒழிப்பதாகச் சொல்லி, வகுப்புவாரி பிரதிநிதித்துவதிற்கு எதிராக தந்திராமாக செயல்பட்டவர் தான் கமல். (பார்ப்பனருக்கு சலுகை கிடையாது; இவரை நாமும் பின்பற்றி சாதியைத் துறந்தால், நமது சலுகையை இழப்போம்; மீண்டும் தகுதி அடிப்படை என்ற பெயரில் பார்ப்பனியம் வளரும், என்பதே அவரின் தந்திரம்)
* தனது கலை வாரிசாக பல திறமை மிக்க நடிகர்கள் இருந்தும், தனது இன நடிகரான மாதவனை (வைணவப் பார்ப்பனர்) அறிவித்தவர் தான் இந்த விஷ்ணுதாசக் கமல்.
பார்ப்பனியத்தைப் பற்றி அய்யா பெரியார் சொன்னது,
ஆரிய மலம்
"சாதத்தில் ஒரு பாகத்தில் சிறிது மலம் விழுந்தாலும் முழுச்
சாதத்தையும் எப்படி ஒதுக்கிவிடுகிறோமோ அது போலவே,
ஆரிய நுழைவு ஏற்பட்ட எல்லா விசயங்களையும்
முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும் என்கிற உணர்ச்சியுடன்
தான் நீங்கள் காரியங்களை நடத்தவேண்டும்"
முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும் என்கிற உணர்ச்சியுடன்
தான் நீங்கள் காரியங்களை நடத்தவேண்டும்"
---௦01.10.1976 "உண்மை"
கமலஹாசன் கருப்புச்சட்டைப் போட்டுக் கொண்டு காவிப் பரப்புரை செய்யும் பார்ப்பனர் என்பதை இதன் மூலம் உணர்ந்த்திருப்பீர்கள். இல்லாவிடில், அவர் மேற்கொண்டு நடிக்கும் படம், பாடல், வசனம், பாத்திரம், ஆகியவற்றை இக்கட்டுரையின் துணை கொண்டு பார்த்தால் உண்மை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
-----------இராவணப் பாண்டியன்--------------

mikka nanri.neenkal oru nikazhvai vittu viteerkal dasavatharathil asin train scene il kamal baadu antha perumal silayai vaankumpothu entha kulamo kothiramo enru ketpal, atharku nayakkan enpan intha baadu ,atharku asin thevidiya oru kevala varthaiyai koori irupal athai maraithirupan.
பதிலளிநீக்கு