வாள் விளையாட்டு வீராங்கனையின் சா(சோ)தனை
சாதனை:-
பவானி தேவி! சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும்
அனந்தராமன் - ரமணி தம்பதியினரின் 5 வது மகள். 19 வயது ஆகும் பவானி தேவி வாள் விளையாட்டுப் போட்டியில் உலக அரங்கில் 3 பதக்கங்கள் தேசிய அளவில் 60 பதக்கங்கள் என்று வாங்கி குவித்துள்ளார். தற்போது கேரளாவில் பி.பி.ஏ. பட்டம் பயின்று வரும் இவர் அங்கேய "வாள் சண்டை" சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார். இவர் பள்ளியிலே வாள் விளையாட்டு வீராங்கனையாம். இவர் தமிழ்நாடு வாள் விளையாட்டு கழகத்தின் பயிற்சியாளர் விசுவநாதனால் பயிற்றுவிக்கப்பட்டவர். வாள் விளையாட்டு கழகத்தின் சேர்மன் டி.ஐ.ஜி.ஜான் நிக்கல்சன் செயலாளர் நாகப்பன், ஆகியோரால் பாராட்டப்பட்டவர். 2006 ஆம் ஆண்டு தங்கம் வென்ற இவர் தொடர்ந்து நடந்த 22 போட்டிகளில் 60 கும் மேற்ப்பட பதக்கங்களை பெற்றுள்ளார். மாநிலங்கள் அளவிலான போட்டியில் தங்கம் வாங்கிய முதல் தமிழ்ப் பெண்ணும் இவரே. 2007 ஆம் ஆண்டு மலேசிய காமன்வெல்த் போட்டி, 2008 இல் பிலிப்பைன்சு "ஆசியன் காடட் சாம்பியன் சிப்" போட்டி, 2009 ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற "அகில உலக வாள்" விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தலா 1 வீதம் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2010 இல் ஆஸ்திரேலியா - தாய்லாந்து ஓப்பன் சாம்பியன் சிப் போட்டியிலும் தங்கம் கை விட்டதற்காக வருந்துகிறார். 2016 இல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கத்தை வெல்வதே குறிக்கோள் என தமிழ் நாட்டிற்கு பெருமை தேடி தர காத்திருக்கிறார்.
சோதனை:-
வெளி நாடுகளில் நடக்கும் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பயிற்சி பெற, விருப்பம் தகுதி இருந்தும் பொருளாதாரப் பிரச்சனையால் இவரால் செல்ல முடியவில்லை. கடந்த முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்காக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ரூ.1 இலட்சம் நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தினார். இப்பொழுதும் அரசு, தனியார், பெரும்புள்ளிகள் யாரேனும் உதவிக்கரம் நீட்டினால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார்.
"காலத்தி னால்செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மானப் பெரிது."
உதவி செய்வோம்!! ஊக்கப்படுத்துவோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக