சனி, 13 ஆகஸ்ட், 2011

ஆங்கிலேயருக்கு எதிராக மறப் போர் செய்த தமிழ் வீரன்




விடுதலைக்காக தமிழ்நாட்டில் நடந்த ஒரேஒரு தாக்குதல் நிகழ்வு:-

மாவீரன் செண்பகராமன் :-


செண்பகராமன், இவர் எல்லோராலும் மறக்கப்பட்ட சுதந்திர போரட்ட வீரர்.
 செப் 15 1881 ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தார். 17  வயதிலேயே "ஜெய்ஹிந்த்" என்கிற வீர முழக்கத்தை உருவாக்கியவர் இவரே.

ஜெர்மனியில் செண்பகராமன்:-


முதலாம் உலகப்போரில் பிரட்டனும், ஜெர்மனியும் மோதின, பிரட்டன் ஆட்சியை  விரட்ட இந்திய இளைஞர்களுக்கு, ஜெர்மனி மறைமுகமாக உதவி செய்தது. தாவரவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் கன்னியாகுமரி வந்த ஜெர்மன் உளவாளி சிடிரிக்லாந்,என்பவர் செண்பகராமனின் வேகத்தை பார்த்து அசந்து போய் அவரை ஜெர்மனிக்கு அழைத்து சென்றார்.அவர்க்கு ஜெர்மன் கப்பல் படையால் பயிற்சி அளிக்கப்பட்டு, எம்டன் கப்பலுடன் இந்தியாக்கு அனுப்பியது ஜெர்மன். அந்நிய ஆதிக்கத்தை வேரோடு அகற்ற வேண்டி எம்டன் கப்பலுடன் வந்து தாக்குதல் நடத்தினார். 1914 ம் ஆண்டு செப்டெம்பர் 27 ம் நாள் இரவு, தூங்கி கொண்டிருந்த சென்னை பற்றி எரிந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை, துறைமுகம், பாரிமுனை, உயர் நீதிமன்றம், என்று நகரில் பல முக்கிய இடங்களில் குண்டு வீச்சு நடந்தன. பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலால் ஆங்கிலேய அரசு ஆடிப்போனது.  70  ஆயிரம் பேர் நகர் பகுதியை விட்டு வெளியேறினார்கள். இறுதியில் 1934 -ம் ஆண்டு ஜெர்மனியில் செண்பகராமன் மறைந்தார். 1966 -ம் ஆண்டு அவரது அஸ்தியுடன் அவரது மனைவி இலட்சுமி மும்பையில் இறங்கும்போது, பிரதமர் இந்திரா காந்தி, இந்திய போர் கப்பலான  ஐ.என்.எஸ். இல் மும்பையில் செண்பகராமனின்  அஸ்தியை  ஏற்றி, குமரி முனைக்கு அனுப்பி வைத்தார். அவரது அஸ்தி குமரி கடலில் கரைக்கப்பட்டது.
இன்னும் செண்பகராமன் புதூர் எனும் ஊர்  குமரி மாவட்டத்தில்  உள்ளது.

விடுதலை போராளிகளை போற்றுவோம்!!         
விடுதலை நாளை கொண்டாடுவோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக