திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பொய் வழக்கு என்று பொய்சொல்பவர்களுக்கு.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலங்களை  மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நடவடிக்கை அரசு தொடங்கிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 2 ,800  மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நடவடிக்கை பலி வாங்கும் நடவடிக்கை என்று புலம்பும் கலைஞருக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும், இந்த புலம்பல்களை நம்பும் சில மக்கள்களுக்கும், ஒரு சிறிய விளக்கம் தான் இது.

புகார் 1 : கல்பனா: (மதுரை)

                             இழந்தவை : திருமலை நாயக்கர்  கோயிலுக்கு அருகில் உள்ள  வீடும், கடையும்.
                             மிரட்டியவர்: அட்டாக்  பாண்டி பெயரைச் சொல்லி அவரது சொந்தக்காரர்கள் 

புகார்:2 : பாப்பா  மற்றும் சிவனாண்டி: (திருமங்கலம்)
                              மிரட்டியவர்: பொட்டுசுரேஷ்.

புகார் 3 : சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள 23 குடும்பங்கள் நான்கு ஆண்டு -களாக  நடுத் தெருவில் நிற்கின்றன .

புகார் 4 : உத்தங்குடி நாகர் ஆலய குருக்கள் வி.வி. சுப்பிரமணியன்  நிலம் அபகரிப்பு, அதனால் ஒருவர் காணமல் போன விவகாரம்.

புகார் 5 : சீனிவாசன் (காடுவெட்டிப் பாளையம் )
                    மிரட்டியவர்: ஜெ.அன்பழகன்  (பேப்பர் மில்லை கைப்பற்றும் விவகாரம் )

புகார் 6 : பாண்டீஸ்வரி (அவனியாபுரம்)
                        தனது கணவர் பாண்டியராஜனை, கொன்று அதை ஒரு விபத்தாக மாற்றி வழக்கை முடித்துவிட்டார்கள்  என்று, எஸ்.ஆர்.கோபி  தரப்பு மீது குற்றம் சாட்டுகிறார்.

இந்த நடவடிக்கைகள், புகாரளித்தவர்களுக்கு திருப்தி கரமாக உள்ளதால், புதிய புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளது. இவ்வழக்குகளால் ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு இலபாம் என்று பார்த்தால், அது
"சிவில் வழக்குகளில் கிரிமினல் வழக்குகளும் சேரும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்  வாழ் நாள் முழுவதும் வழக்குடன்  மல்லுக்கட்டுவதே, பிழைப்பு என்றாகிவிடும்".
           இது தி.மு.க.வினருக்கு மட்டுமல்ல, அக்கட்சியினருகும் பொருந்தும் என்பதே உண்மை.
                                                          ---------------இராவணப் பாண்டியன்-------------------- 
                                                                      (ஆதாரம் விகடனிலிருந்து )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக