பசி தான் மானுடத்தின் பொது மொழி!
அது சோழ நாட்டு விவசாயியை, துபாய் சேக்கின் ஆறாவது மனைவியின் பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க அனுப்புகிறது.
சில வெள்ளி காசுகளுக்கு, கடைசி விருந்தில் கர்த்தரைக் காட்டிகொடுக்கிறது.
அஞ்சாறு வயசுத் தளிர்களை சிக்னலில் நின்று ரைம்ஸ் புத்தகம் விற்க சொல்கிறது.
விஜய்க்கும், அஜித்துக்கும் டூப் போட்டு, மூணாவது மாடியில் இருந்து தள்ளி காலை உடைக்கிறது.
டீச்சர் சாயலில் இருப்பவளை செம்மொழி பூங்கா வாசலில் ஐம்பதுக்கும், நூறுக்கும் ஆள் பிடிக்க அலைக்கழிக்கிறது.
"பசி காலத்தையும் கோலத்தையும் அரித்துக் கொண்டு அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்.!"
----------------------------ராஜுமுருகன்---------------------------
(வரிகள்..வட்டியும், முதலும் கதையிலிருந்து)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக