அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட இந்திய வீரர்கள் அங்கு பாலியல் முறை கேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி, அசிங்கப்பட்டு உள்ளது.
ஆப்பிரிக்கபோர்:-
கனிம வள அரசியலின் பின்னணியில் 1998 இல் தொடங்கி காங்கோவில் நடந்து வரும் போர் நவீன உலகம் சந்தித்த போர்களிலேயே மிக மோசமான 8 ஆப்ரிக்க நாடுகள், 25 ஆயுத குழுக்கள் இந்த போரின் பின்னியில் மனித வேட்டையாடின. இது வரை 54 இலட்சம் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ளது.
பாலியல் வன்முறை ஒரு ஆயுதமாக அந்த போரில் பயன் படுத்தப்பட்டுள்ளது, ஒரு பெண்ணை பல பேர் சேர்ந்து சிதைப்பது. மற்றும் ஆயுத குழுக்களை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரை கொண்டு சிதைப்பது போன்ற பாலியல் வன்முறை அரங்கேறியுள்ளது. இந்த போர் காலத்தில் மட்டும் குறைந்தது இரண்டு இலட்சம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். என்றே ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.
காங்கோவில் இந்திய இராணுவம்:-
2003 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு கண்காணிக்கவும் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோவுக்கு அனுப்பட்டது.22000, பேர் கொண்ட அந்த பன்னாடு படையில் 3896, இந்திய வீரர்கள். ஆனால் யாரை பாதுகாக்க சென்றார்களோ, அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார்கள். இந்திய வீரர்கள்.
இந்திய இராணுவத்தின் பாலியல் கொடுமைகள்:-
* காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கேடயமாக வைத்து காலங்காலமாக அத்து மீறல்களை நடத்தி வருகிறது இந்திய இராணுவம்.
* மணிப்பூரில் மனோரமா என்கிற இளம் பெண் ஆயுதப் படையினரால் வன்முறைக்கு ஆளானார்.
* இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் "இந்திய இராணுவமே எங்களையும் பலத்கரப்படுத்து" என்கிற பதாகை தாங்கி நிர்வாண ஆர்பாட்டம் நடத்தினர்.
* கடந்த 10 ஆண்டுகளாக துளி நீரை கூட குடிக்காமல் தொடர் போராட்டத்தில் இருக்கும் "இரோம் ஷர்மிளாவின்" போரட்டத்தின் அடித்தளம் இது மனோரமா கொலை தான்.
* காஸ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் இருந்து கடந்த ஜூன் வரை 9999 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக "காஷ்மீர் மீடியா சர்வீஸ்" தெருவிக்கிறது.
* ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ் பெண்கள்.
இந்திய வீரர்களின் மீது வந்த அடுக்அடுக்கான புகார்களால் செய்யப்பட்ட முதல் கட்ட விசாரணை:-
ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான் கி மூன்,
இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்பதாக தெரிவித்தார். ஆனால் இந்தியா இரண்டு ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஐ.நா. நெருக்குதல் கொடுத்ததால் கடந்த மே 24 ஆம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது இந்தியா.
இந்த சூழலில் பாதிக்க பட்ட பெண்களை பற்றியும் அவர்களுக்கு பிறந்த இந்திய ஜாடை குழந்தைகளை பற்றியும் செய்தி வெளியானதால் கையும், களவுமாக பிடி பட்டிருக்கிறது. இந்திய இராணுவம்.
இந்திய அரசின் செயல்பாடு:-
இந்திய அரசும் இந்திய இராணுவமும் இக்குற்றச்சடுகளை மூடி மறைப்பதிலேயே வழக்கமாக கொண்டுள்ளது.இந்த பாலியல் வன்முறை
வழக்கமாக பதிவு செய்யபடுவது, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் போது தான். ஆனால் அப்படி பதிவு செய்யும் வழக்குகள் மீதும் பாரபட்சமாக விசாரணையை நடத்தி இருக்கிறது இந்திய இராணுவம்.
காஸ்மீரில் 1994 இல் தொடங்கி 2010 வரை அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988 . இந்த புகார்களில் 95 % புகார்கள் ( 940 வழக்குகள்) போலியானவை கடந்த ஆண்டு கூறினார் இந்திய தரைப் படைத் தளபதி வி. கே. சிங்.
இந்திய அரசு இவ்விவகாரங்களில் தலையிடாமல் நமது எதிர்க் கட்சிகளைப் போலவே (கூட்டு கள்ளன்) செயல்படுகிறது.
இந்த தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் துறைகளையும் மூடி மறைக்க "தேச பக்தி" என்கிற ஒரு சொல் மட்டும் போதுமானதாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக